இன்றைய நாள் எப்படி – 21 மே 2024

21/05/2024 செவ்வாய்கிழமை

1)மேஷம்:-
படித்து முடித்து உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசிப்பீர்கள்.

2)ரிஷபம் :-
பிரபல்யமானவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

3)மிதுனம்:-
பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கி அதை விரிவாக்கம் செய்ய முன் வருவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்து முயற்சி வெற்றி பெறும்.

4)கடகம்:-
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடன்பிறப்புகளின் திருமண நிகழ்வுகள் உள்ள மகிழும் விதம் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் .

5)சிம்மம்:-
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்க்கு நிறைவு தரும் விதத்தில் நல்ல ஊதியம் கிடைக்கும்.

6)கன்னி:-
வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவர். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து போதிய ஊதியம் தருவதாக சொல்லி அழைப்பார்கள்.

7)துலாம்:-
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

8)விருச்சிகம்:-
அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தலைமை பொறுப்புக்கள் வரலாம்.

9)தனுசு:-
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

10)மகரம்:-
தந்தை வழி உறவிலிருந்த விரிசல் அகலும். உங்கள் தொழில்முன்னேற்றத்திற்கு பெற்றோர் உறுதுணையாக இருப்பர்.

11)கும்பம்:-
கருத்து வேறுபாடுகள் அகலும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மனக்கவலை மாற மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

12)மீனம்:-
வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று அல்லது பணிபுரிய வேண்டும் என்று விரும்புவர்களுக்கு அதுவும் கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.