இன்றைய நாள் எப்படி – 20 மே 2024

20/05/2024 திங்கட்கிழமை 

1)மேஷம்:-
வேலை இல்லாமல் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு இப்பொழுது வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். வாங்கிய கடனை கொடுத்து மகிழ வாய்ப்பு உண்டு.

2)ரிஷபம் :-
தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். தெய்வ தரிசனங்கள் திருப்தி தரும் விதம் அமையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

3)மிதுனம்:-
உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். தாய் வழி ஆதரவு உண்டு.

4)கடகம்:-
நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். கருத்து வேறுபாடு அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கருத்துக்களை உயரதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

5)சிம்மம்:-
தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கிளை தொழில் தொடங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் கிடைக்கும்.

6)கன்னி:-
என்றைக்கோ கொடுத்த கடன் வசூலாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.

7)துலாம்:-
வேலையில்  பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வந்து சேரும். மறைந்த புதினால் நிறைந்த தன லாபம் உண்டு. பொருளாதார பற்ற குறை அகலும்.

8)விருச்சிகம்:-
வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானம் வந்து சேரும்.  கல்வி மற்றும் கலை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதரவு உண்டு.

9)தனுசு:-
தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். கட்டிய வீடு பாதியில் நிற்கின்றது என்ற கவலை இனி அகலும்.

10)மகரம்:-
உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் பலன் தரும்.

11)கும்பம்:-
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் . பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்பட தக்கதாக இருக்கும். அவர்களின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

12)மீனம்:-
தாய் வழி ஆதரவு கிடைக்கும். தடை கற்கள் அகலும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கும் பொழுது வேலை அமையும்.