இன்றைய நாள் எப்படி – 18 மே 2024

18/05/2024 சனிக்கிழமை 

1)மேஷம்:-
பொருளாதார பற்ற குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பளம் உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

2)ரிஷபம் :-
திடீர் திடீரென சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மனக் குழப்பம் அதிகரிக்கும். எந்த காரியத்தையும் உடனடியாக செய்ய இயலாது.

3)மிதுனம்:-
நல்ல சம்பவங்கள் பலவும் நடைபெறும். நாடு மாற்றம் வீடு மாற்றமும் ஏற்படலாம். தேடிப் பார்த்தோம் கிடைக்காமல் இருந்த ஒரு பொருள் இப்பொழுது தேடாமல் கைக்கு கிடைக்கும்.

4)கடகம்:-
தொழில்வலம் சிறப்பாக இருக்கும். உத்யோக மாற்றம் உறுதியாகலாம். வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக அமையும்.

5)சிம்மம்:-
தொழில் வெற்றி நடை போடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

6)கன்னி:-
நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

7)துலாம்:-
சுபச் செலவுகள் அதிகரிக்கும். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

8)விருச்சிகம்:-
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

9)தனுசு:-
எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பதால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

10)மகரம்:-
புனித பயணங்கள் அதிகரிக்கும். போராட்ட நிலை மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

11)கும்பம்:-
சுகங்கள் சந்தோஷங்களும் வந்து சேரும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

12)மீனம்:-
உடன்பிறப்புகள் வழியில் பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்து பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும். முடிவுக்கு வந்த வழக்குகள் மீண்டும் தொடரலாம். இடமாற்றம் இனிமை தரும்.