இன்றைய நாள் எப்படி – 11 மே 2024

11/05/2024 சனிக்கிழமை 

1)மேஷம்:-
சகோதர ஒற்றுமை பலப்படும். பகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

2)ரிஷபம் :-
விரயங்கள் கூடுதலாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் வந்து மனக்குழப்பத்தை உருவாக்கும். வீடு மாற்றம் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

3)மிதுனம்:-
கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். அரசு வழி ஆதாங்கள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும்.

4)கடகம்:-
தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளை கையாண்டு லாபம் சம்மதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

5)சிம்மம்:-
பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் வெற்றி நடை போடும். வெளிநாட்டில் இருந்து அனுகூல தகவல் வந்து சேரும்.

6)கன்னி:-
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு என்பது பழமொழி. எனவே எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் அதை அந்த நேரத்தில் செய்து முடிக்க இயலும்.

7)துலாம்:-
வாழ்க்கை துணைக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சியை காண்பீர்கள். கூடுதல் வருமானம் குடும்பத்திற்கு வந்து சேரும்.

8)விருச்சிகம்:-
கல்வி கலை சம்பந்தமாக எடுத்து முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் கிடைக்கலாம்.

9)தனுசு:-
பிள்ளைகளுக்கான சுபகாரிய பேச்சுக்கள் கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

10)மகரம்:-
கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் வேலை சம்மந்தமாகவும் வெளிநாடு செல்வது சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.

11)கும்பம்:-
சகோதர விரோதங்களை எதிர்கொள்ள நேரிடும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது அரிது.

12)மீனம்:-
தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.