பரீட்சை முடிவடைந்து சென்ற மனைவியை கடத்த முற்பட்ட 4 இளைஞர்கள் கைது

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் வேன் மற்றும் 4 இளைஞர்களை கண்டி, அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொதுப் தரப் பரீட்சையின் இறுதி வினாத்தாளைப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு கடந்த புதன்கிழமை (15) சென்று கொண்டிருந்த வேளையில் யதிஹலகல சந்தியில் வைத்து கடத்த முயன்றுள்ளனர்.

அப்போது, ​​அவருடன் இருந்த மேலும் இரு மாணவர்கள் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பில் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அவ்விரு மாணவர்களும் உடனடியாக முறையிட்டுள்ளனர்.

அழைப்பை பெற்றுக்கொண்ட அலதெனியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வேனை துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைது செய்தததுடன், மாணவியை கடத்திச் சென்ற வேனையும் கைப்பற்றியுள்ளனர்.