நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்தவர்களின் 15ஆம் ஆண்டு நினைவாக இன்று (18) அதிகாலை நந்திக் கடலில் மலர் தூவி, ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.