பிரதான செய்திகள்

புதிய அரசமைப்பின் பின் ஜனாதிபதித் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சம்பந்தன் கோரிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதி புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்பதாகும். அதற்கான முயற்சிகள் மந்தகதியிலேயே நகருகின்றன. ஆகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு, மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது. - இவ்வாறு ...

மேலும்..

சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பில் அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதற்காக புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்காக 1913 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இது 24 மணித்தியாலங்களும் செயற்படும் ...

மேலும்..

வைத்தியசாலைக் கழிவுகளை கொட்டியமை தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டனர்

வைத்தியசாலைக் கழிவுகள் வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த மூவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் கழிவகற்றல் பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர குறிப்பிட்டுள்ளார். கடந்த நாட்களில், செவனகல, ...

மேலும்..

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறை

பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறைகள், திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்கீழ், 31 500 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 85000க்கும் அதிகமானோரைக் கொண்ட ...

மேலும்..

சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது-அமைச்சர் பி.ஹரிசன்

சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என தனியாக மக்களை பிரிவினைப்படுத்தி இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அனைவரும் ஒன்றிணைந்தே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு எல்லா மக்களையும் ஒற்றுமைப்படுத்தி அரசியல் செய்கின்ற ஒரே கட்சி ஜக்கிய தேசிய கட்சியே என ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய போட்ட அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோத்தபாய தீவிரமாக ஈடுபடத் ஆரம்பித்துள்ளார். இதன்போது ஊடகங்கள் கேள்வி எழுப்பப் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

தேர்தல் தொடர்பில் மைத்திரிபாலவின் அதிரடி அறிவிப்பு!

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர், அதிபர் செயலகத்தில் மேல் மாடியில் உள்ள அதிபரின் அறைக்குச் சென்ற சில ...

மேலும்..

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் வெளியானது புதிய தகவல்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணிலுக்கு ஆதரவானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் சஜித்தின் ...

மேலும்..

பலாலி விமானநிலையத்தை விரிவுபடுத்த காணிகள் கையகப்படுத்த இடமளிக்கப்போவதில்லை -மாவை .சேனாதிராசா

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு காணிகள் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மயிலிட்டி துறைமுகத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர்மேலும் தெரிவித்தவை வருமாறு பலாலி ...

மேலும்..

கோட்டாவுக்கு ஆபத்து; அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராபக்ஸவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. முதலாவது பொதுக் கூட்டத்திலேயே அதனை ...

மேலும்..

வழமைக்குத் திரும்பும் யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள்

வகுப்புப் பகிஷ்கரிப்பைக் கைவிட்டு இன்று (18) முதல் வழமைபோன்று கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (17) வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு ...

மேலும்..

பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட தமிழரசின் பட்டிப்பளைக் கிளைக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை தென்மேற்குப் பிரதேசக் கிளைக் கூட்டம் இன்றைய தினம் அப்பிரதேசக் கிளையின் தலைவரும், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளருமான எஸ்.புஸ்பலிங்கம் தலைமையில் முதலைக்குடாவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், இலங்கைத் தமிழ் ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று காலி முகத்திடலில்

மக்கள் விடுதலை முன்னணியின் ‘தேசிய மக்கள் சக்தி மாநாடு’ இன்று (18) காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. தமது முன்னணியுடன் இணைந்துள்ள குழுக்கள் மற்றும் அமைப்புகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். முற்போக்கான சக்திகள், கல்விமான்கள், ...

மேலும்..

பிரபாகரனின் வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்கிறார்கள் என்றால் ரணிலை நிராகரிக்க வேண்டும்

"ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை. அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள். புலிகளின் தலைவர் ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்

மட்டக்களப்பு புளியந்தீவு தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாநாகரசபையின் ஒத்துழைப்புடனான சிரமதான நிகழ்வொன்று இன்றைய தினம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கு.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை புளியந்தீவு தெற்கு வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், திருப்பெருந்துறை வட்டார உறுப்பினர் மா.சண்முகலிங்கம், ...

மேலும்..