மொட்டு கட்சியில் இருந்து பிரிய தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று (10 ) மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 6ஆவது சந்திப்பு இதுவாகும்.குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.