தரமற்ற தடுப்பூசி இறக்குமதி குற்றச்சாட்டில் வைத்தியர் விஜித் குணசேகர கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி மருந்து இறக்குமதி தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 10 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கிய பின்னரே அவர் இக் கைது இடம்பெற்றுள்ளது.