நெடுந்தீவு படகு சேவை நேரமாற்றம் நாளை முதல் நடைமுறைக்கு

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து நேரம் நாளைமுதல் (மே 12) நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந் நேரமாற்ற நடைமுறையின் பிரகாரம் சமுத்திரதேவா படகும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளதுடன் தனியார் படகான கரிகணன் படகுசேவை வழமைபோல சேவையில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.