பொலிஸ் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதுண்டு பலி

யாழ் புன்னாலைக்கட்டுவனில்பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளது.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை  நிறுத்துவதற்கு முற்பட்ட நிலையில் அதனை செலுத்திய நபர் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்துள்ளார்.

இரு பொலிஸார் விரட்டி சென்ற நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொதுமக்கள் குற்றஞ்சாட்டு

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.