பிரதான செய்திகள்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்மாதிரியான நோயாளர்சேவை நோக்கு! அனைவரும் பெரும் வரவேற்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஒரு மீள்குடியேற்றப் பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை என்பதாலும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பபாண மாவட்டத்தில் முக்கிய 'ஏ' தர ஆதார வைத்தியசாலை என்பதாலும் அங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் காணப்படுகின்றது. அதுவும் தற்போது நாட்டின் பொருளாதார ...

மேலும்..

மட்டக்களப்பில் சடா முடியுடன் மீட்கப்பட்ட முன்னாள் போராளி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர், நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீடக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்துவந்துள்ளனர். பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன், உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு,சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்! விரைவில் அது நடக்கும் என்கிறார் மாவை

13 ஐ அமுல்படுத்துவது ,இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பது என்பவை ஜனாதிபதியின் கைகளில் தான் உள்ளது. பௌத்த பிக்குகள், சிங்களக் கட்சிகளே 13 ஐ கமுரதயாக எதிர்க்கின்றன. இத்தகைய விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதே கட்டாய தேவையாகவும் உள்ளது இதனை ...

மேலும்..

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்றிட்டங்களை வரவேற்கிறோம் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்கிறோம். சிறந்த திட்டங்களை முழுமையாக வரவேற்போம். இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திக்கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த முடிவினையும் எடுப்பேன்- சந்திரகாந்தன்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.அரசாங்கம் எனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும் ...

மேலும்..

யாழ். வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்பில்!!

யாழ்.போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் இந்த ...

மேலும்..

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களின் தலையீடுகளே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாமைக்குக் காரணம் – விக்னேஸ்வரன் சாடல்

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதா இல்லையா நாடாளுமன்றமே தீர்மானிக்கும் – நீதிமன்ற தீர்ப்பிற்கு ரணில் பதில்!

"இவ்வருடம் தேர்தலுக்கான வருடம் அல்ல, தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டிய கட்டாயமும் இல்லை, இது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்கும்." இவ்வாறு, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் ...

மேலும்..

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும்- க.வி விக்கினேஸ்வரன்

இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ...

மேலும்..

கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் வேம்பிராயில் மீட்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் இன்று மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...

மேலும்..

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் – பொ.கஜேந்திரகுமார் எச்சரிக்கை

மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை  மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்கள் இதனை நிறுத்தவேண்டும் அல்லது  உங்கள் ...

மேலும்..

கொட்டகலை தீ விபத்து – சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

(அந்துவன்) கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ...

மேலும்..