ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இருக்கையில் இறப்பு 

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரது சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாகவும், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிதுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி லங்காம டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க (வயது 39) என்ற நபரே இவ்வாறு ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிதுல பார்மஸ்டன் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து திம்புல பத்தனை ஊடாக நாவலப்பிட்டி நோக்கி நேற்று (15) பிற்பகல் பயணித்த பஸ்ஸில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பஸ்ஸை வேறு பஸ்ஸில் ஏற்றி பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இணைந்து பஸ்ஸின் தொழிநுட்பக் கோளாறை சரிசெய்து பஸ்ஸை திருப்பி அனுப்பியுள்ளனர். நாவலப்பிட்டியில் பஸ்ஸை ஓட்டிச் செல்லும் போது பஸ் சாரதிக்கு திடீர் சுகையீனம் ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து விபத்துக்குள்ளான போது பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மாத்திரமே பயணித்துள்ளதாகவும், பின்னர் சாரதி ஆசனத்தில் உயிரிழந்த பேருந்தின் சாரதியின் சடலத்தை லிதுலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் லிதுலை பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டது

விபத்தில் பஸ்ஸும் வீதியின் பாதுகாப்பு வேலியும் பலத்த சேதமடைந்துள்ளதுடன் மரணம் மற்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிதுலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.