இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் நியமிப்பு

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன்னாக டபிள்யூ. ஏ.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம் அல்லது கூட்டமைப்பின் எந்தவொரு முடிவு அல்லது எந்தவொரு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவது அவரது கடமையாகும்.