மரண அறிவித்தல்
சுந்தரம் செல்வராசா (ரிங்கர் செல்வம்)
யாழ்ப்பாணம்,பருத்தித்துறை வீதி முதலாம் ஒழுங்கை (கிடாய் விழுந்தான்)பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் செல்வராசா (ரிங்கர் செல்வம்) 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம்-பாக்கியம் தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும் யா/நீராவியடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-செல்லம்மா தம்பதியரின் மூத்த மருமகனும் கனகாம்பிகை (கமலவேணியின்)இன் அன்புக் கணவரும் (சுவிஸ்) கோபிராஜ் (1995 இல் காணாமல் போனவர்) தாரணி(அமெரிக்கா), சுபாசினி,தபோதினி(முகாமைத்துவ உதவியாளர் யாழ்/பிரதேச செயலகம்)ஆகியோரின் அன்புத் தந்தையும் இராசேந்திரம்,அருளாளன்,இந்திரதேவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பழனித்துரை,கனகரத்தினம்,காலஞ்சென்ற பொன்மணி ஆகியோரின் சகோதரனும் சகானா,சமீனா,இந்துசன்,அநாகன்,அநாஜினி ,அநாளன் ஆகியோரின் பாசமிகு பேரனும் நகுலேஸ்வரன்,மகேஸ்வரி,யோகாம்பிகை,கல்யாணி ,தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் :குடும்பத்தினர்
54/2 முதலாம் ஒழுங்கை(கிடாய் விழுந்தான்)பரு.வீதி,
யாழ்ப்பாணம் .




