மரண அறிவித்தல்

அப்பையா குணராஜா (குணம்)

தோற்றம்: 05.01.1957   -   மறைவு: 04.10.2016

சூராவத்தையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அப்பையா குணராஜா(குணம்) (04.10.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 9 மணியளவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அப்பையா – பரமேஸ்வரி தம்பதியரின் 5 வது புதல்வனும் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் றெஜினாவின் அன்புக் கணவரும் டெனிஸ் கமல்ராஜ், ஜெனிஸ்சில்வியா, லூட்ஸ்அனுசியா, ஜென்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும் மொறிஸ்குமார், சுரேஷ்குமார், அனிஸ்ஒலிவியா ஆகியோரின் சிறிய தந்தையும் சோதிராசா, ரஞ்சினிதேவி, ரஞ்சிதமலர், பாக்கியராசா, றதிகுமாரி, ரஞ்சனா(வாதனி), வேல்ராசா, ஜெயந்தி(பட்டு), செந்தில்குமரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் சஞ்சிகா, அஞ்சலோ,குணா, நில்சன், ஆகியோரின் மாமனாரும் எமிலியானா, பிறைடன், பிறையானா, மெலினா ஆகியோரின் அருமைப் பேரனும் றெஜிஸ், ஜெயசீலா, எல்மோ ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று(06.10.2016) வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சூராவத்தை புனித திரேசாள் ஆலயத்தில் திருப்பலியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஏழாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த தகவலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
ஏழாலை சேமக்காலை
திகதி : 06.10.2016
இடம் : சுன்னாகம்
தொடர்புகளுக்கு
டெனிஸ் கமல்ராஜ்
தொலைபேசி : 0212241205