ஓராண்டு நினைவஞ்சலி

அமரர்திரு.சரவணமுத்து குகராஜன்

தோற்றம்: 31.03.1957   -   மறைவு: 13.02.2016

யாழ்.சாவகச்சேரி கைதடி-நுணாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி பிராங் போட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சரவணமுத்து குகராஜன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .

தகவல்-மனைவி,பிள்ளைகள்

ஆற்றலின் பிறப்பிடமே!! அன்பின் உறைவிடம்!!
ஆண்டொன்று அகன்றிட்ட நாள் இன்று
அவனி போற்ற வாழ்ந்தீர்கள் – அப்பா
அனாதையாய் நாம் இன்று நீங்கள் இன்றி

பாரினில் நாம்வாழ பல வழிகள் செய்தீர்கள்.
பாதியில் சென்றதேன் எமை விட்டு?
பக்குவமாய் எமை காத்த தெய்வமே !!
பரிதவிக்க விட்டீர்கள் எமை இங்கு !!

கண்ணிமையாய் எம்மைக்காத்த தந்தையே !!
கடைசிவரை காக்காது சடுதியில் சென்றதேன்!!
கலங்கி நிக்கின்றோம். கதறி அழுகின்றோம்.
கனவாகி போகாதோவென்று கடவுளை வேண்டி!!

சின்ராசு என்றதும் சீரான உதவிகளை
சிறப்பாக சில நொடியில் செய்தீர்கள்!!
ஊர் போற்றும் உத்தமனாய் வாழ்ந்தீர்கள்
ஊருக்காய் வாழாதேன் இன்னும் சில காலம் ?

நல்லவர் மேல் தீராத ஆசை ஆண்டவனுக்கு
நடு வயதில் சேர்த்துக்கொண்டான் தன்னோடு
மரணங்கள் மண்ணில் வாழும் மனிதர்க்கு
மனதில் வாழும் தெய்வங்களுக்கு ஏது !!!!

என்றும் உங்கள் நினைவுடன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
– மனைவி, பிள்ளைகள்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : +496995114988