1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அஜிதா லிங்கநாதன்

பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஜிதா லிங்கநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், இலங்கை மீசாலை வடக்கைச் சேர்ந்த லிங்கநாதன் கோகிலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,
அபினாஷ், அனுசன், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

யூலை ஒன்று எம் இன்ப வாழ்வையெல்லாம் ஒருங்கே!
எரிந்து சாம்பலாக்கிய நெருப்பு நாள்
படைத்த பிரமனே தன் தலையில் கைவைத்து கலங்கிய
தாமரை மலர் ஒன்று கருகிவிட்ட கரியநாள்
சிரிப்பும் கும்மாளமுமாக இருந்த எம் குடும்பத்தை
அழுகைக்கே சொந்தக் காரராக்கிய கொடிய நாள்…

அஜிதா நீ எமை பிரிந்து ஓராண்டு
மறைந்ததோ நம்பவே மாட்டோம்,
உனை நாம் காணாத நாளில்லை
தினமும் உன் செய்கைகள் தோன்றி மறையுதடி
தூக்கத்தில் கூட வந்து தட்டி எழுப்பி
எனக்கு அழகா இந்த சட்டை என்கிறாய்

அஜிதா உன் வார்த்தைகள் இன்னும் காதில் இனிக்குதடி!!
தேனீ போல் நீ சுற்றி!! சுற்றி!! பறப்பதும் தெரியுதடி!!
உன் வயசுப் பிள்ளைகளை எங்கு பார்த்தாலும்
நீ மாறி!! மாறி!! சட்டை போட்டு கண்ணாடி முன் நிற்கும்
காட்சி முன்னாடி தெரிகிறது. இதுவும் பொய்யாடி
பள்ளிப் பிள்ளை போகும் நேரம் யன்னலோரம் நினறால்
தூரத்தே நீ நடந்து வரும் காட்சி தெரியுதடி

பள்ளிப் படிப்பிலும் சுற்றத்தார் மனசிலும் அஜிதா- நீ
அழியா இடம் பிடித்ததெல்லாம் இப்படிப் போவதற்கா
ஆண்டுகள் ஓடி ஓடி யூலை ஒன்று ஆயிரம்தான் வந்தாலும்
நாம் வாழும் காலம் வரை அஜிதாவே உனை மறவோம்
கண்களில் நீர் சுமந்தபடி உன்னையே தேடி நிற்போம்….!!

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு