மரண அறிவித்தல்

அமரர் அடைக்கலம் அமிர்தநாதன் (சித்த வைத்தியர்)

தோற்றம்: 12-03-1932   -   மறைவு: 04-12-2016
 unnamed
விடத்தல் தீவை பிறப்பிடமாகவும்,மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் ஞாயிற்றுக்கிழமை(4) அன்று காலமானார்.
அன்னார் தாவீது செபமாலையின் அன்புக்கணவரும்,செல்வம் அடைக்கலநாதன்(தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர்),ஜோன் பற்றிக்(ஜேர்மன்),டெமோன் பேட் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர்.
அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வு புதன் கிழமை(7) காலை 10.30 மணிக்கு மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரில் இல்லத்தில் இடம் பெற்று,தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் புனித நற்கருணை ஆண்டவர் ஆலயத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்பக்கொடுக்கப்படும்.
பின்னர் அன்னாரது பூதவுடல் விடத்தல் தீவு புனித யாகப்பர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு    அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு விடத்தல் தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்:-
செல்வம் அடைக்கலநாதன் 
-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
(பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர்)
 
தொடர்புகளுக்கு:-0777760795
நிகழ்வுகள்
தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் புனித நற்கருணை ஆண்டவர் ஆலயம்
திகதி : 07.12.2016
இடம் : மன்னார் தோட்டவெளி
தொடர்புகளுக்கு
செல்வம் அடைக்கலநாதன் 
கைப்பேசி : 0777760795