1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அலோசியஸ் கஜின்சன்

யாழ். மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அலோசியஸ் கஜின்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களின் தவப்புதல்வனே கஜின்
நீ ஆண்டவனின் குழந்தையாகி இன்றுடன்
ஓராண்டு ஆகிறதே செல்லமே
நீ இல்லை என்று நாம் எண்ணவில்லை
உன் உருவம் எம் மனதில் வந்து வந்து
போகிறதே எம் செல்வனே கஜின்.!

நீ ஏன் எம்மை விட்டு சென்றாய்
இந்த சிறிய வயதில்
உன்னை நினைத்து ஏங்குதே
உன் அன்னை மனம்
நீ மறுபடியும் வந்து பிறப்பாயோ.!

ஆறாத ரணங்களுடன் ஆயிரம்
இரவுகள் அழுதாலும் எம் செல்வனே
உன் பிரிவின் துயர் தான் குறைந்திடுமோ.!

எங்களை விட்டுப் பிரிந்து சென்ற
உமது நீங்கா நினைவுகளோடு
உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

என்றும் உன் நினைவுடன் வாழும் அம்மா..!

அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்த்தனை 30-12-2013 திங்கட்கிழமை அன்று காலை 6:30 மணிக்கு மணற்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் அவரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
அலோசியஸ் பிறேமினி.

நிகழ்வுகள்
ஆத்மாசாந்தி பிரார்த்தனை
திகதி : 30-12-2013 திங்கட்கிழமை அன்று காலை 6:30 மணி
இடம் : மணற்காடு புனித அந்தோனியார் தேவாலயம்
தொடர்புகளுக்கு
அலோசியஸ் பிறேமினி — இலங்கை
கைப்பேசி : +94778312849