1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அ.இ. கோபாலபிள்ளை (Gopalan Trading Company- Colombo)

திதி : 21 ஓகஸ்ட் 2013

நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த அ.இ. கோபாலபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த
உங்களை வானுறைந்த தெய்வமாய்
நாம் வணங்கி ஆண்டொன்று
ஆனதப்பா……..

விழுதுவிட்ட பெரு விருட்சமாய்
உங்கள் நினைவில் நாம் இங்கே
எம்மை பெருந்துயரில் மாளவிட்டு
ஆறுவீரோ நீங்கள் அங்கே

உங்கள் மக்கள் விசும்புகிறார்
மருமக்கள் புலம்புகிறார்
பேரனோடு பேத்திமாரும் தாத்தாவை
தேடுகிறார்கள்..

ஆண்டொன்று கூடி அழுதபோதும்
மாண்டவர் மீண்டு வருவதில்லை
அது புரிகிறது…

கொடுத்து கொடுத்து குறையாத கை
உங்களுக்கு ஆதலால் மீண்டும் ஒரு
வரம் கேட்டோம்.
ஆண்டுகள் பல ஆனாலும் உங்கள்
நினைவுகள் நெஞ்சில் நிறைந்திருக்க
வேண்டும் அப்பா..
உங்கள் ஆத்ம சாந்திக்காக நயினை நாகபூசணி அம்மனைப் பிரார்த்திக்கின்றோம்.

என்றும் உங்கள் நினைவுடன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கோபி — கனடா
தொலைபேசி : +14035109051
வைஷ்நவி — பிரித்தானியா
கைப்பேசி : +447507638312
இலங்கை
தொலைபேசி : +94112502718
கைப்பேசி : +94772762922