1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராசையா மனோன்மணி

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா மனோன்மணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐயிரண்டு திங்களாய்
அங்கமெலாம் நொந்து பெற்ற
அன்புருவானவளே
அன்னை எங்கள் ஆருயிரே…

நவகோள்கள் போல நீ
பெற்றவர்கள் நவமணிகள்
எங்களைக் கட்டிலிலும் தொட்டிலிலும்
கால் மேலும் தோள் மேலும்…

நெஞ்சில் கிடத்தி
நிலத்தில் தவழவிட்டு
தாலாட்டிச் சீராட்டி
பாசமுடன் வளர்த்தவளே…

ஏற்றிவைத்த மெழுகுதிரி
உருகி ஓளி வீசுதல் போல்
எம் வாழ்வில் ஓளி ஏற்றி
நீ அணைந்து போனது ஏன்!!!!

நீ பெற்ற செல்வங்கள்
நவமணிகள் நாமிருக்க
நாம் பெற்ற செல்வங்கள்
ஈர்பத்தோடேழிருக்க…

அவர் பெற்ற மழலைகள்
நாலிரண்டு பேரிருக்க
என்ன அவசரத்தில்
அரன் அழைத்தான் உனை அங்கு…

தாயே நின் பிரிவெமக்கு
ஆண்டு பல சென்றாலும்
ஆறாத்துயர் அம்மா
ஆற்றுதற்கு யாருமில்லை…

கண்கள் கசிகின்றன
நெஞ்சம் கனக்கின்றது
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இறை அருளை வேண்டுகிறோம்…

பாசமுடன்
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து ஈமச்சடங்குளில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக எம் துயரங்களை பகிர்ந்து கொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்தோருக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 11-11-2013 திங்கட்கிழமை அன்று 835, Boul George – Vanier #4, Montreal, Qc, H312B5, Canada என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும், இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் — கனடா
தொலைபேசி : +15147390238