1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இராமலிங்கம் சதாசிவம்பிள்ளை

திதி : 18 பெப்ரவரி 2013

வேலணை வடக்கு, சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை பள்ளம்புலத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமலிங்கம் சதாசிவம்பிள்ளளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தனித்திருந்து தாயாகவும் தந்தையாகவும்
இறைவனுமான தந்தையே! மூன்றான
சகோதரர்க்கு தனியொருத்தியாய் நானிருந்தபோதினிலே
அன்போடு ஆச்சி ஆச்சி என்று
பேச்சிற்கு பேச்சு அழைக்கும் ஐயா!!

நினைவுகள் வருகுதையா ஆண்டொன்று
ஆனாலும் கவலைகள் பெருகுதையா
மூச்சினிலே ஆச்சி ஆச்சி என்ற
சத்தமெல்லோ என்காதினிலே ஒலிக்குதையா
இறுதிநேரத்திலும் அருகிலிருந்து அழமுடியவில்லை ஐயா

ஆறாத துயர் தீராது என்னை
வருத்துதையா அம்மாவின் அரவணைப்பு
அறியாது உங்களின் அரவணைப்பில் ஆறுதல்
கொண்டேன். அம்மாவிடமா? ஆண்டவனிடமா?
சென்றீர்கள் உங்கள் சீவன் ஆண்டவன்
அடிசேர வழிபடுகின்றேன்.

உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்,
ஊரவர்கள், நண்பர்கள்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி….!!!

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சௌந்தரராஜன் தில்லைசொருபி (மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41782271600
கைலாசபதி (மகன்) — இலங்கை
கைப்பேசி : +94776943512
தில்லைநாதன் - மகன் — ஜெர்மனி
கைப்பேசி : +494216366392