மரண அறிவித்தல்

அமரர் எஸ்.பி முத்து (முன்னாள் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தரும், பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியர்)

மன்னார் பெரிய கடையை பிறப்பிடமாகவும், மன்னார் உப்புக்குளத்தை வதிவிடமாகவும், கொண்ட திரு.எஸ்.பி. முத்து அவர்கள் 11-01-2014 அன்று காலமானார்.

இவர் முன்னாள் ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தரும்,பக்தி விஜயம் மாதாந்த சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் அபிவிருத்திச்சங்க நிர்வாக உறுப்பினரும், சமூக சேவையாளரும் ஆவர்.

இவர் அமரத்தும் அடைந்த சுப்பையா இராமாகி தம்பதிகளின் அருமைப் புதல்வரும், திருமதி இலங்கேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், அச்சரா, அனித்திரா, கிருஸ்னிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

திரு.திருமதி சின்னத்துரை கண்னகை தம்பதிகளின் மருமகனுமாவார்.

அன்னாரின், ஈமைக்கிரியைகள் திங்கட்கிழமை 13-1-2014 மாலை 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின் மன்னார் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்,
மைத்துனர்,
திரு. திருமதி இலங்கேஸ்வரன் விஜிதா குடும்பத்தினர்.
;.

நிகழ்வுகள்
கிரியை, தகனம்
திகதி : 13-01-2014 திங்கட்கிழமை மாலை 3 மணி
இடம் : மன்னார் உப்புக் குளத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின் மன்னார் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
திரு. திருமதி இலங்கேஸ்வரன் விஜிதா (மைத்துனர்)