31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும், நன்றிநவிலலும்

அமரர் கதிர்காமு நகுலநாதன்

சாவகச்சேரி கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு நகுலநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

உதவி என்று கேட்டால் உறங்கவே மாட்டாய் நீ
தீர்வுகள் காணும் வரை ஓயவே மாட்டாய் நீ
யார் பிள்ளைகளையும் உன் பிள்ளைகள் போல்
எண்ணியே வாழ்ந்தாய் நீ

யார் பிரச்சனைகளையும் உன்
பிரச்சனைகள் போல் சுமந்தாய் நீ
தேடற்கரிய செல்வம் நீ
தெவிட்டாத தெள்ளமுதம் நீ

விழிகள் இமைக்க மறுக்கின்றதே
விழிதான் உனை அழைத்த செய்திகேட்டு
உறவாய் ஒளியாய்த் திகழ்ந்தவரே
உலகினை விடுத்து சென்றதேனோ
வையகம் மீது நின் வரவுக்காய்
அழியாத உன் அன்பதனை
அவனியில் இனி யாம் பெற முடிவதெப்போ?
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி 

அன்னாரின், ஆத்ம சாந்திக்காக 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணி முதல் 18:00 வரை De pomhorst wijkcentrum,Pomona 562,6708 CV,Wageningen, Holland என்னும் முகவரியில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்தனைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் திடீர் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு, நேரிலும், தொலைபேசியின் வாயிலாகவும் இரங்கலையும், ஆறுதலும் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு