மரண அறிவித்தல்

அமரர் கந்தையா அம்பலவாணர்

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் தற்போது 651/12 நாவலர் வீதி நல்லூரில் வசித்து வந்தவருமாகிய திரு கந்தையா அம்பலவாணர் 14/08/2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா மூத்தபிள்ளை தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை அன்னம்மா தம்பதியினரின் மருமகனும், காலஞ் சென்ற மனோன்மணியின் அன்புக் கணவரும்,

காலஞ் சென்ற வர்களான அருளம்பலம், செல்லம்மா, பொன்னையா, சின்னம்மா, நல்லதம்பி, பவளம்மா ஆகியோரின் அருமைச் சகோதரனும், காலஞ் சென்றவர்களான செல்லம்மா, கார்த்திகேசு, சுப்பிரமணியம், சிவக்கொழுந்து, பரிமளம், பேரம்பலம், மங்கயற்கரசி, நமசிவாயம், பரமசிவன், பத்மநாதன், சுப்பிரமணியம், நடராசா மற்றும் மகேஸ்வரியின் அன்பு மைத்துனரும்,

சிறீதரன் (ஹொலண்ட்), கமலாசினி (நோர்வே), ரவீந்திரன், நிதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியசாயீஸ்வரி (ஹொலண்ட்), பரஞ்சோதிநாதன் (நோர்வே), சுகுமாரன் (நிர்வாகப் பணிப்பாளர் – மெர்க்கண்டைல் பாதுகாப்புச் சேவை தனியார் நிறுவனம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிரோஜன் (ஹொலண்ட்), நேமிக்கா (ஹொலண்ட்), காலஞ்சென்ற யசோதரன் மற்றும் கேளிதரன் – தவநிதி ரமேஸ்தரன் – பிரியந்தி, தாருணி – பகீரதன், தர்சிகா, லவீனா, செந்தூரன் (பிரான்ஸ்), டில்லிக் குமாரன் (ஜெர்மனி), நிரோஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் கிசாந்தன், ரம்மியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 16/08/2013 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணியளவில் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தமிழ் சி.என்.என் இன் கண்ணீர்ப்பா…
(கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க…)
அமரர் கந்தையா அம்பலவாணர் அவர்களுக்கு தமிழ் சி.என்.என் குடும்பத்தின் கண்ணீர் அஞ்சலி

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16/08/2013 வெள்ளிக்கிழமை
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
சுகி (இலங்கை)
கைப்பேசி : 0094 (077) 773 0597