1 ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகசபை நடராசா

திதி : 1 சனவரி 2013
நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாவற்குழி பெற்றெடுத்த மைந்தனே
நல்லவரின் மாணிக்கமே நடராசாவே
நல்லூர் பதியில் வாழ்ந்த உத்தமரே
நம்மை விட்டு பிரிந்ததேனோ – ஐயாவே…
நாவற்குழி பிள்ளையாரும் நம் குலதெய்வம்
ஐயனாரும் உங்கள் சன்னதி முருகனும், தமை
பாட உமை அழைத்தாரோ – உங்கள்
பாட்டு இன்றும் எங்கள்
காதினிலே கேட்குதய்யா…
ஸ்ப்த ஸ்வரங்களைப் பெற்றெடுத்த தனவானே
சத்தமின்றி போனதேனோ எம் ராசாவே
சாவென்ற புயற்காற்று – சுழன்று வந்து
சாய்த்ததுவோ உங்களை தான் – ஐயாவே…
மனைவியவள் – கதிகலங்கி இருக்க
மான்புறு புத்திரர் மலைத்து நிற்க
மருமக்கள் மனம் வருந்தி நிற்க
பேரப்பிள்ளைகள் பூட்டபிள்ளைகள்
பேதவித்து இருக்க உற்றாரும்
மற்றாரும் உறைந்து நிற்க
உவகை பூத்த முகத்துடனே
ஈசன் பாதமதில் கலந்துவிட்ட
எம் குல தெய்வமே…
கட்டிடங்கள் காலத்தால் சிதைந்து போகும்
காசு பணம் வாழ்நாளில் கரைந்தே போகும்
நல்லவையும் சில நேரம் வாழ்வில் தாழும்
உன் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்…
எம் சூரியனே நீர் மேற்கே சென்று மறைந்ததென்ன
மீண்டும் நீர் கிழக்கே வந்து உதிக்காயோ
ஆதவனே நீரின்றி எம் மனம் இருளானதே
குலமகனே எம் குலமதை விளங்கச் செய்வாய்…
எங்கள் ராசாவே நீர் சென்று
ஆண்டு ஒன்று உருண்ட போதும்
ஆறாது எம் துயரம் மாறாது – எம்
சோகம் அழியாது உம் நினைவு
நெஞ்சை விட்டு அகலாது உம் சிரிப்பு
தாங்காது தாங்காது – எம் மனம் தாங்காது
தவிக்கின்றோம் – தவிக்கின்றோம்
தினம் தினமே…!!!
தகவல்
மனைவி, பிள்ளைகள்.