1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகாம்பிகை அம்மா மாணிக்கவாசகர்

வட்டுக்கோட்டை அராலி வடக்கு குலனையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை அம்மா மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எம்மை விட்டு நீங்காது அம்மா

வளம் கொழிக்கும் குலனையூரில்
இல்லறம் எனும் நல்லறமதனை
இனிதே நடத்தி

ஈர் மூன்று மகவை ஈன்றெடுத்து
அன்பையும், பண்பையும், பாசத்தையும்
உணவாய் ஊட்டி வளர்த்தவள் நீ

மயிலைக் கந்தனின் பக்தையாய் வாழ்ந்தனால்
சொர்க்க வாசல் சென்று விட்டாய்

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எமை விட்டு நீங்காது அம்மா

உள்ளூரில் மட்டுமல்ல வெளியூரிலும்
உன் இல்லமதை வந்தடையும் மகவுகளில் தோழர்தமை
சூரியனாய் நின்று வெளிச்சம் காட்டியவள் நீ அதனால்
காலையில் தோன்றும் சூரியனில் உன் முகத்தை
கண்டாறுதல் அடைகின்றோம் அம்மா

ஓராண்டு காலம் உருண்டோடிப் போனாலும்
உன் அழியாத நினைவுகள்
எமை விட்டு நிங்காதம்மா….

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 10-02-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு No:37, Rue des Coccinelle, 93150 Le Blanc-Mesnil, France என்னும் முகவரியில் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்
தொலைபேசி : +33148665536
கைப்பேசி : +33616070798