17 ஆவது ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலாதேவி சிவசுப்ரமணியம்
நீங்காத நினைவுகளை எனக்கு கொடுத்து விட்டு
நீங்கள் எங்களை விட்டு நீங்கி சென்றது எங்கே அம்மா…
சிறு வலி என்ற போதும் தூங்காமல் துடித்துப் போவீர்கள்…
இன்று நான் தூங்கமால் உங்கள் பிரிவால்
துடித்துப் போய் இருக்கின்றேன்…
உங்களைத் தான் காணவில்லை அம்மா…
என்னை பற்றிய
கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்ந்தீர்கள்…
இன்று என் கனவுகளிலும் கற்பனைகளிலும்
நீங்கள் வாழ்வது ஏன் அம்மா….
உங்கள் நினைவுகள் வலி என்று
தான் மறக்க நினைக்கின்றேன்…
ஆனால்,
துடிக்கும் இதயம் உங்களை நினைத்து துடிக்கும் போது
என்னால் மட்டும் எப்படி முடியும் அம்மா உங்களை மறந்து விட…
உங்கள் நினைவுகள் வலி என்ற போதும்
உங்கள் நினைவுகளில் மூழ்கி விட்ட
எனக்குவெளி வர தான்முடியவில்லை அம்மா…
பாசத்தையும் மட்டுமே எனக்கு கொடுத்தீர்கள்…
ஆனால்,
அப்போது எனக்கு புரியவில்லை…
இன்று பாசத்துக்காய் ஏங்குகின்றேன்…
நீங்கள் எங்கு சென்றீர்கள்…
என்னை தவிக்க விட்டு…
அம்மா நான் உங்களுடன் வாழ்வது
கற்பனை என்ற போதும்
என்கற்பனை என்ற போதும் அதை
கலைத்து விட வழி தெரியவில்லை…
ஆண்டுகள் பல சென்ற போதும்
உங்கள் பிரிவின் வலி இன்னும் மாறவில்லை அம்மா…
உங்கள் பிரிவை நினைத்து தவிக்கும்
என் மனம் தினமும் தவிக்கிறது…
நீங்கள் என்னை பிரிந்து
ஒரு நொடி கூட இருக்க மாட்டீர்கள்
என்ற நம்பிக்கையில்…
அம்மா என்னை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்…
எங்களை நினைத்து மட்டுமே வாழ்ந்தீர்கள்…
இன்று எங்களை மறந்து எங்கு சென்றீர்கள் அம்மா…
தகவல்: சயந்தன் (மகன்)