1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலாதேவி துரைராசா (சின்னக்கிளி)

திதி : 8 ஓகஸ்ட் 2013

வேலணைகிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் வையின் பீல்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி துரைராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

குலவிளக்கே எங்கள் அம்மா ……..
எம்மைவிட்டு எங்குசென்றீரோ……
எங்கள் ஒளி விளக்கே அம்மா…
உன் நினைவால் நித்தம் வாடுகின்றோம்…..
சென்ற இடம் கூராயோ
வருடமொன்று சென்றதம்மா-உன் குரல்
கேளாது உன் வாசம் செல்லாது

நம் இல்லம் இருளாய் போனதம்மா..
உன் திருமுகம் பாராமல்
ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா …
உன் உதட்ரோர புன்னகை காணாது
உள்ளம் வாடிநிற்கின்றோம் அம்மா …….

அன்பு காட்டி எம்மை அரவணைத்து- என்றும்
புன்னகைத்தவண்ணம் உறவுகளோடு உறவாடி
ஊர் குடிவிருந்தோம்பிய
உன் உத்தம பண்புதனைகண்டு
நினைத்தழுதோம் அம்மா

ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவு இருந்தும் என்ன?
வேரென நீயிருந்தால் நாங்கள்
வீழ்ந்துவிடாது இருந்தோம்.
வாசம் குன்றாவாழ்வுதந்து வழியெங்கும்
ஒளிதந்து தேசம் புகழும் நிலைதந்த
எங்கள் அம்மாவே….

இன்று கதறி அழவிட்டுவிட்டு
நீ சென்று ஓராண்டு ஆனதே அம்மா…..
எங்கள் குலதெய்வமே அம்மா….
விட்டிடும் கண்ணீரை உன்
பாதச்சுவட்டை நனைத்துடுவோம்…….
என் தாயோ……..

உன் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள்
நாங்கள் உன் ஆத்மாசாந்தியை வேண்டிநிற்கின்றோம் தாயே……
ஓம் சாந்தி! ஓம் சாந்தி…

அன்னாரின் முதலாம் ஆண்டு கிரியை 11-08-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகின்றது. உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41716225247