1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கருணாநிதி சத்தியராணி

தாயகத்தில் யாழ் – நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்து 2543 Lengnau ஐ வசிப்பிடமாகவும்
கொண்ட அமரர் கருணாநிதி சத்தியராணி அவர்கள் இறைபதம் அடைந்து (02.11.2013) இன்றுடன் ஓராண்டு பூர்த்தி
அடைகிறது. அன்னாரது ஆத்ம சாந்திக்காய் அனுதினமும் இறைவனை வேண்டுகிறோம்.

ஆண்டு ஒன்று போனதம்மா…!
உம் நினைவகல மறுக்குதம்மா…!

நெஞ்சத்திரை விட்டகலா அன்புச் சித்திரமே!
நோயுருக்கும் வேளையிலும் எமை நினைத்துருகினாயோ!

உயிர் கருகும் வேளையிலும் உறவுகளை நினைத்து ஏங்கினாயோ!
வேரற்றமரமாய் வீழந்து நான்கிடக்கின்றேன்.

தாயற்ற பிள்ளைகளோ! திசையறியா தவிக்கின்றன.
உன் அன்புச்சங்கிலி அறுந்ததினால்
அழுது துடிக்கின்றன உறவுகள்…

காலக்கணிப்பில் ஒராண்டு கரைந்திருக்கலாம்
காயம் இன்னும் ஆறவில்லை கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உருமறைந்துபோனாலும் எம் உள்ளமதில் வாழ்கின்றீர்.

ஆழ் மனக்கிடங்கில் உம் நினைவுகளைப் பதிய வைத்து
பொக்கிஷமாய் – என்றும் பூஜிப்போம்…

ஓம் – சாந்தி – சாந்தி – சாந்தி

ஆறாத துயரத்தில் இருந்து இன்னமும் மீளாது தவிக்கும்,
கணவன் – பிள்ளைகள்
தாய் – சகோதரங்கள்
மருமகன் – பேத்தி
உறவுகள்

தகவல்: கணவன் – கருணாநிதி

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கணவன் - கருணாநிதி
தொலைபேசி : 032 652 34 61
கைப்பேசி : 079 329 96 82