1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் குகதாசன் கனகரத்தினம்

யாழ்.கொக்குவில் வளாகவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா 40 Falstaff Ave ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் கனகரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் ஆருயிர் தந்தையே எம்மை விட்டு
எங்கு சென்றீரோ
எம்மைவிட்டு பிரிந்து செல்ல உங்களுக்கு
என்றும் மனம் வராது.
ஐயா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்…

எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனைக்கும் எம் தந்தைக்கு நிகராகுமா?
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்!

பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த ஓவியமாய்
வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்.

உங்கள் துயரால் வாடும் மனைவி, பிள்ளைகள், தாய், தந்தை, சகோதரர்கள், மைத்துனர்கள்.

தகவல்
ரூபன், கமல், ரமேஸ்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கமல் — கனடா
கைப்பேசி : +14168382027
ரமேஸ் — கனடா
கைப்பேசி : +14168394069