31ஆம் நாள் நினைவஞ்சலி

அமரர் குகதாசன் பிரியங்கா

சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குகதாசன் பிரியங்கா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி!

எங்கள் பிரியமே
பிரியங்கா குட்டி!
எங்களை விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டதும் ஏனம்மா?
எங்களை விட்டு நீர் தூரப்போனதும் ஏனம்மா!

பெற்ற தாய் கலங்கித்தவிக்க
உன்னைத்தெய்வமாய்த்தூக்கி
வளர்த்த உன் தந்தை கதறிப்புலம்ப
கண்ணின் மணி போன்ற
அண்ணாக்கள் துயரில்
உடைந்து போக!

உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
துயரில் வாட, எங்கள் இதயத்தில்
காவிய தீபமாய் நீ இருக்க
நிலவாய் வானில் சென்றதேனம்மா?

சொந்தங்கள் உம்மைத் தேட
பந்தங்கள் உம்மைக்கேட்டுப்புலம்ப
மாயமாக மறைந்ததேனம்மா?
எங்கள் குலத்து குத்துவிளக்கே
மும்பத்தொரு நாளென்ன
முண்ணூறாண்டானாலும்
உன் அன்புத்தங்கமுகம்
எம் நெஞ்சஞ்களை விட்டு அகலாதே!!

என்றும் உன் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி சாந்தி!!

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 09-05-2013 வியாழக்கிழமை அன்று மட்டுவில் தெற்கில் அமைந்திருக்கும் அவர் இல்லத்தில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
விலோஜன்- அண்ணா — இலங்கை
கைப்பேசி : +94770869953
ராசன்- மாமா — பிரான்ஸ்
தொலைபேசி : +33130630211
சசீலா- சித்தி — நோர்வே
தொலைபேசி : +4722104706