31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் குலதேவி தர்மகுலசிங்கம்

திதி : 13 ஏப்ரல் 2014

யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலதேவி தர்மகுலசிங்கம் அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி.

அன்பிற்கு அடைக்கலமானவள்
ஆத்மீக இன்பத்தைத் தேடியவள்
இன்பமயமானவள்
ஈடு இணையற்ற இல் வாழ்வாள்
உறவிற்கு உரம் சேர்த்தவள்

ஊா் அறிந்த உயா் குணத்தாள்
எல்லைகள் கடந்த நட்புடையாள்
ஏகாந்த சொரூபமானவள்
ஐங்கரனுக்கு பணி செய்தவள்

ஓம் எனும் பிரணவத்தை உரத்து உச்சரித்தவள்
ஓங்காரமாய் உயா்ந்து நிற்பவள்
ஔதடம் போல் அரு மருந்தானவள்

அன்னாரின் 31 ஆம் நாள் சிரார்த்த தினம் 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இந் நாள் உயிரினில் உயா்ந்து மெய்யில் கலந்த நாள். அன்றைய தினத்தில் அவா் இறைவனடியில் இன்புற்றிருக்க இறைவன் இறைஞ்சுகிறோம்.

தகவல்,
குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள்.

நிகழ்வுகள்
31 ஆம் நாள் சிரார்த்த தினம்
திகதி : 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம் : சுவிஸ் Lausanne
தொடர்புகளுக்கு
சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41216252952
கைப்பேசி : +41787214672