4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கேசவன் மார்க்கண்டு

கரவெட்டி தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கேசவன் மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான வார்த்தை எங்கே
அழகான சிரிப்பு எங்கே
பணிவான நடை எங்கே
பண்பான குணம் எங்கே
இதையெல்லாம் பறித்தவன்தான் எங்கே

ஓடிவரும் எம் மேகங்களே
சொல்லுங்களே எங்கள் தம்பி எங்கே
கோலமிடும் இந்த உறவுகளை
பாருங்களே எங்கள் தம்பி எங்கே

விதி என நொந்து விழுந்தாலும்
விழிகளில் ஈரம் குறையவில்லை
சதி என நீ அறியுமுன்னே
ஏன் இழந்தாய் உன்னூயிரை

கோபுரமாய் நீ உயர்ந்து நின்றாய்
காலம் ஏன்தான் சரிந்ததய்யா
உன் கனவு எழுந்து உயருமுன்னே
சதி வந்து உன்னை பறித்ததய்யா

நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா
நல்ல மனிதன் நீ என்று விழிகள்
வணங்கி பெருகுதய்யா

எரிந்த தீபம் அணைந்ததென்ன
அணைத்த கைகள் மறைந்ததென்ன
தாயின் கதறல் கேட்கலையா
நீயின்றி தவிக்கும் உன் பிள்ளைகளின்
சோகமும் உனக்கு புரியவில்லையா

உங்களை எங்களிடமிருந்து பிரித்துவிட்டாலும்
என்றோ ஒரு நாள் நாங்கள் உங்களிடம்
வருவோமென்று ஆறுதலுடன் வாழ்கின்றோம்.

ஓம் சாந்தி

உங்கள் பிரிவின் துயரால் வாடும் தாய், சகோதரங்கள், பிள்ளைகள், மருமக்கள், பெறாமக்கள்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கனடா
தொலைபேசி : +14167867322