31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் சின்னத்துரை பரமானந்தசிவம்

காரைநகர் பாலக்காட்டைப் பிறப்பிடமாகவும், நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை பரமானந்தசிவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜரத்தினம் அன்னலெச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலைவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதாகர், நிஷாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்புத் தந்தையே நீங்கள் இறைவன் அடி சேர்ந்து மாதம் ஒன்றானதே!
வாழ்ந்து வதைப்பட்டதெல்லாம் போது மென்றெண்ணி
வண்ணமா உலகின் பொய்யான வாழ்வை முடித்து
சிவன் சரணம் சேர்ந்தீரோ?
சுகம் பெற்று மீண்டும் வருவீர்கள் என்றிருந்தோம்
ஆனால் காலனும் சதி செய்தானோ?
சொல்லாத சோகத்தை இன்று நெஞ்சத்தில் சுமக்கின்றோம்
கள்ளமில்லா உன் சிரிப்பின் கனதியினால் துடிக்கின்றோம்
பாசமான எம் உறவே பாதியிலே போனதெங்கே?
நெஞ்சு மறந்திடுமோ?

புன்னகை பூத்த உங்கள் முகம் எம் முன்னே வராதா?
பண்பும் பரிவுமாய் புத்துணர்வு தரும் உங்கள் குரல்
இனிமேல் எம் காதுகளில் கேட்காதா?
ஊனுடலும் மறைந்தாலும் உள்ளத்தே நிறைந்த நீங்கள்
எங்கள் வாழ்வுக்காய்
உங்கள் பால் ஈர்க்கும் ஈர்க்கும்
அன்பைக் கூற மொழிகள் கிடையாது,
தேவையுமில்லை

உங்கள் மனம் பற்றிச் சொல்ல அகராதி போதாது
உங்கள் நினைவுகள் எம் நெஞ்சில் உயிர்
உள்ள வரை
உள்ளத்தாலும் உணர்வாலும் எங்களுடன்
என்றும் வாழ்வீரே
எமக்காய் நீ இருந்தீர் உமக்காய்
நாம் அலைந்தோம்
இன்றும் கண்களில் நீர் சொரிய
நாம் மட்டும் இங்கு…………
நமக்காய் ஒரு பொழுது வெகு தொலைவில்
இல்லை என்று
உம் மடியில் தவழ்ந்திடுவோம் மறுபடியும்.

நினைவுகளை இதயத்தில் சுமந்துபடி எமையெல்லாம் ஆராத்துயரில் ஆழ்த்தி நீக்க மறநிறைந்திருக்கும் எம் அன்புத் தந்தை திரு. சின்னத்துரை பரமானந்தசிவம் அவர்களின் இறுதி நிகழ்வில் கலந்து துயரினிற் பங்கு கொண்டு ஆறுதல் தந்த அனைவருக்கும்,
இச் செய்தி கேட்டு நேரில் பங்குகொள்ள முடியாத சூழ்நிலையில் வெளிநாடுகளிலும் துயரத்தை சுமந்து தேம்பி நிற்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் தந்தவர்களுக்கும், போசனம் கொடுத்து ஆறுதல் அளித்தவர்களுக்கும், காலமறிந்து சாலமும் செய்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எம் இதயம் ஒன்றித்த நன்றிகள் உரித்தாக்குகின்றோம்.

இவர் தம் தூய நல் ஆத்மா
நிலையான நித்திய ஆத்மாசாந்தி பெறப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு