1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவராஜசிங்கம் சிவகுமார் (பாபு)

திதி : 13 நவம்பர் 2013

மாகியப்புலம் ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜசிங்கம் சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இமயம் சரிந்து ஆண்டொன்று ஆனதே-எம்
இதயங்கள் சுமக்கும் துயர் என்றும் இனி ஓயாதே

அன்பு மகனாய், பாசமிகு சகோதரனாய்,
நல்ல தந்தையாய் தரணி போற்றும்
குடும்பத் தலைவராய் தக்க வழிகாட்டியாய்
தலைமை கொண்ட தெய்வமே!

நெடுந்தூரப் பயணம் சென்றீர்களே
விதியென்று மனமாற முடியவில்லை
விதிர் விதிர்த்து அழுகின்றோம் அப்பா தினமும் -எம்
துயர் தீர்க்க வாருங்கள் அப்பா

எங்கள் அன்புத் தந்தையின் ஆத்மா
எல்லாம் வல்ல சிவன் பாதக் கமலங்களில்
என்றும் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்

ஓம் சாந்தி……. ஓம் சாந்தி …..ஓம் சாந்தி!!!

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து ஈமச்சடங்குளில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியோருக்கும், பல்வேறு ஊடகங்கள் வாயிலாக எம் துயரங்களை பகிர்ந்து கொண்டு அனுதாபமும், ஆறுதலும் தெரிவித்தோருக்கும் மற்றும் பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும் எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 13-11-2013 புதன்கிழமை அன்று No 5 Place De Soest 10000 Troyes France என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும், இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பிரான்ஸ்
கைப்பேசி : +33650842535