1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவராஜா சாரதா

திதி : 27 செப்ரெம்பர் 2013

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜா சாரதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஒரு வருடம், பன்னிரெண்டு மாதங்கள்,
ஐம்பத்திரெண்டு கிழமைகள்,
முன்னூற்று அறுபத்துநான்கு நாட்கள்
நீ மறைந்த பின் ஓடி விட்டன
என்றாலும்

உன் பிரிவு தந்த துயரம்
இன்று போலவே நெஞ்சில் இன்னும் பாரமாய்
கணவனுக்காய், பிள்ளைகளுக்காய்,
உன்னைப் பெற்றோருக்காய்,
உடன் பிறப்புகளுக்காய்
உறவினருக்காய், ஊரவருக்காய் நீ வாழ்ந்த
வாழ்க்கையை நினைத்து பார்க்கின்றோம்

தனக்கென ஏதும் கொள்ளாது
இரப்பார்க்கு வாரி வழங்கும் கர்ணன் போன்று
தர்மம் இயற்றினாயே..
ஈற்றில் தனிமரமாய் எமைத் தவிக்கவிட்டு
தனியிடம் சென்றாயே
மண்ணுலகு போல் விண்ணுலகிலும்
நாமெல்லாம் உன்னுடன் ஒன்றாய் இருக்க
இறையருளை இந்நாளில் வேண்டுகின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மாலினி புஸ்பராஜா — பிரித்தானியா
கைப்பேசி : +447424254232
ஷதுர்ஜன் சிவராஜா — பிரித்தானியா
கைப்பேசி : +44748062611