நினைவஞ்சலி

அமரர் சிவானந்தன் ரூபிணி

கொக்குவில் இந்துவின்
கண்ணீரஞ்சலி

அமரர் சிவானந்தன் ரூபிணி

கொக்குவில் இந்து அன்னை
கோர்த்தளித்த மலரில் ஒன்றாய்
தக்கவோர்தகவும் தாயின்
தனிவழிப்படுத்தலாலே
மிக்கதோர் பள்ளியோங்க
மிடுக்குடனுதவும் சுகிர்தா
பக்கமாய் மலர்ந்த ரூபி
பாரிடை நீத்தாள் என்றார்
சொர்கமாய் கண்ட கனவில்
சுழிவிழுந்திழுத்தவாறு
நிர்க்கதியாக்கிச் சிவாவின்
சிறகினையுடைக்கக் கண்டே
சிந்தையில் நிறைந்த பள்ளிச்
சிறாருடனாசிரியர் சமூகம்
நொந்துமே செய்தி தந்தோம்
வாழ்ந்திடும் பயிர்மேல் வெள்ளம்
மூடிய நிலையில் உள்ளீர்
முற்றுமாய் விலக்க எம்மால்
கூடிய மட்டும் முயன்றோமின்று
கூவியே அழத்தான் செய்தோம்
வாடிய பயிர்மேல் தண்ணீர்
வடிக்கின்றோம் கண்ணீர் நிதமும்
கூடிய உறவில் இணைந்து
குவிக்கிறோ மஞ்சலிகள்.

தகவல்
அதிபர், ஆசிரியர்கள்,
பாடசாலை பழைய மாணவர் சங்கம்,
பாடசாலை நம்பிக்கை நிதியம்
யாழ்/ கொக்குவில் இந்துக் கல்லூரி

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
கொக்குவில் இந்துக் கல்லூரி
தொலைபேசி : 021 222 2646