கண்ணீர் அஞ்சலி
அமரர் செல்லையா வரோதயன் (பிரசித்த நொத்தாரிசு, சமாதான நீதவான்)
![](https://www.tamilcnn.lk/wp-content/uploads/2016/02/funeral-01-Recovered-300x352.jpg)
துயர் பகிர்வோம்
அமரர் செல்லையா வரோதயன் அவர்கள் (பிரசித்த நொத்தாரிசு, சமாதான நீதவான்)
மனித பண்பில் உயரிய உயிர் ஒன்று
நித்திரையில் நினைவு அறும் போது
உயிர் முத்திரையை உதிர்த்து
மரணம் எனும் பகுதிக்குள் சென்றுள்ள
மனம் வெதும்பும் செய்தி கேட்டோம்
வெள்ளி துலங்கும் வேளையிலே
வெற்றுடம்பு செய்தி எம்மை
ஜயோ அநீதி என்று
அலறும் உங்கள் துயரச் செய்தியுடன்
இவ் வெள்ளி தினமும் உதயமானதே
உங்கள் புன்னகையும் பூ மனமும்
என்னாலும் எமது சங்கத்துக்கு
புகழ் பூத்து தினம் காத்து
புது புது அர்த்தங்களை
என்னாலும் அரங்கேற்றி
உம்மாலே வசந்தத்தை பருகினோமே
சமூக பணியும் அறநெறியும்
சேர்ந்த உங்கள் பன்பு
தொடரும் என நம்பியிருந்தோம்
இதற்கு முற்றுப்புள்ளியிட்டு
முடிவாகி போனதே
வட கிழக்கு உழைக்கும் தொழிலாளர்களும்
உம் பணி ஏற்று செயற்பட்டு உயர
ஏணியாக இருந்து உழைத்திரே
வருடங்கள் 15 ஆகிறது சங்கத்தின்
ஆலோசனை பணி நேற்று வரை தொடர்நிலையில்
எமது மனத்திரையில் என்றென்றும் ஊஞ்சலாடும்
மாமனிதராக நிறைந்துள்ள நீங்கள்
மனிதருள் மாணிக்கமல்லவா?
மரணம் மனிதனுக்கு உடையதே!ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திகிறோம்
சாந்தி! சாந்தி! சாந்தி!
உங்கள் துயரில் கலந்து நிற்கும்
தலைவர் மற்றும் நிருவாகத்தினரும், ஆலோசகர்களும், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் , வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் , அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி, வட கிழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், ஸ்ரீலாங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம்