1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தங்கேஸ்வரன் ஜெய்குமரன்

வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தங்கேஸ்வரன் ஜெய்குமரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உன் நினைவு மட்டும்
நெஞ்சை விட்டு மறைய மறுக்கிறது
வாழ்க்கை ஆரம்பித்த கனத்திலே
தெய்வத்திடம் போக நினைத்த தென்ன
துயர் வந்து அடைக்குதே
தேற முடியாது தவிக்கின்றோம்

உயிராக உன்னை நினைத்து வாழ்ந்த
மனைவி, அப்பா, அம்மா, உடன்பிறந்த அண்ணன்மார்,
மைத்துனிமார், பெறாமக்கள்
என இத்தனை பேரையும் தவிக்கவிட்டு
மீளாத்துயரில் ஆழ்ந்ததென்ன

நேராக வாழ்ந்து நெறியைக் காட்டி
நினைவெல்லாம் என் குடும்பம் என்று
கண்டவர் கவரும் இனிய பேச்சும், சிரிப்பும்
ஊர் போற்றும் உத்தமனாகவும் வாழ்ந்து
உன் பாசத்தில் வாழ்ந்த உறவுகள், நண்பர்கள்
எல்லோரையும் தவிக்கவிட்டு
ஓடி மறைந்ததின் மர்மம் என்ன

எம்மோடு நீ இன்று இல்லை என்றாலும்
எம் நெஞ்சில் நீ என்றும் நீங்காது
சுடராய் வாழ்கிறாய்
இறை அன்போடு உன் ஆத்மா
சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி… ஓம் சாந்தி… ஓம் சாந்தி…

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு