2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிராஜா மயில்வாகனம்

திதி : 31 ஓகஸ்ட் 2013

மருதங்குளம் மட்டுவில் தெற்கு, மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes – La – Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிராஜா மயில்வாகனம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குலவிளக்கே
நீங்கள் எங்கு சென்றீர்கள்
உங்கள் நினைவு எம்
உயிர் உள்ளவரை அகலாது
நானும் உங்கள் பிள்ளைச்
செல்வங்களும் நித்தமும் உங்கள்
நினைவால் துவழ்கின்றோம்….

நீங்கள் திரும்பி வர மாட்டீர்களா.?
ஆண்டவனுக்கும் பொறுக்கவில்லை!
ஏன் இந்தச் சோதனை
அன்பின் ஆருயிரே

எங்கள் அன்பின் தந்தையே
எத்தனை காலங்கள் போனாலும்
மறப்போமா உங்களை!
காலன் கையில் நீங்கள்
போயிருந்தாலும் காலமெல்லாம்
எங்களுடன் வாழ்கின்றீர்கள்

உங்கள் மறைவை எண்ணியேங்கி
இதயம் வரைக்கும்
இறங்கிய சோகத்தால்
இன்றுவரை எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்

இரண்டு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில்
என்றென்றும் ஒளி விடுவீர்கள்…..

உங்கள்
ஆத்மா சாந்தி அடைய என்றும்
பிரார்த்தி்க்கும் உங்கள் அன்பு
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், நண்பர்கள்
ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!!!! ஓம் சாந்தி!!!!

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — பிரான்ஸ்
தொலைபேசி : +33134791960
மகன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33607112137