31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அமரர் திருமதி இராஜலஷ்மி சின்னத்தம்பி

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அமரர் திருமதி இராஜலஷ்மி சின்னத்தம்பி
மலர்வு-1933.07.27 உதிர்வு-2015.07.04
திதி-2015.08.03
குடும்பத்தின் ஒளிவிளக்காய் எம்வாழ்வில் ஒளியேற்றிய தெய்வமே
அன்பின் திருவருளாய் அனைவருக்கும் இனியவளாய்
உயிரோடு உறவாடி-எம் உணர்வோடு சேர்ந்து விட்ட
எங்கள் குலவிளக்கே விளக்கருகில்
வடுபோல என்றும் விலகாமல் நிற்கும்
எம் தாயின் ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டு துயர்பகிர்ந்தும் பல வழிகளில் பல்வேறு உதவிகள் செய்தும் எம் கவலை தீர்க்க எம்மை ஆற்றுப்படுத்திய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் மற்றும் இத்துயர் கேட்டு தொலைபேசிகள், மின்னஞ்சல்கள் மூலமாக ஆறுதல் வார்த்தைகள் தெரிவித்தோருக்கும், எம் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக 03.08.2015ம் திகதி திங்கட்கிழமை அன்று எமது இல்லத்தில் நடைபெறும் 31ம் நாள் ஆத்ம சாந்திக் கிரியையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
குடும்பத்தினர்
இல280, விஜயவாசா நாவற்குடா, மட்டக்களப்பு.
தொடர்பு-0652245927, 0777577788