மரண அறிவித்தல்
அமரர் திருமதி .கந்தசாமி பவளம்

பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பவளம் 16.02.2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற கந்தசாமியின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதியினரின் அன்பு மகளும் ,காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ் சென்றவர்களான திருப்பதி,சபாபதி,வேலுப்பிள்ளை,சின்னத்தங்கச்சி மற்றும் பூமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அருந்ததி,அருந்தவமலர், காலஞ் சென்ற கருணானந்தன்,அன்பரசி,கருணாகரன்,சிவசக்தி, காலஞ் சென்ற இலட்சுமி தேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தேவராசா,ஸ்ரீதரன்,யாழேந்தி,ஜெகதீஸ்வரன்,பொன் ரஞ்சினி,பரமானந்தன்,ரமேஸ்காந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 1030 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தீத்தாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளவும்.
வைரவர் கோவிலடி,
பத்தமேனி,
அச்சுவேலி.