31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியையும்

அமரர் திருமதி கோபாலபிள்ளை லெட்சுமி

திதி : 08 யூன் 2014

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும், பின் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை லெட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி கிரியையும்.

அம்மா!!!

காமதேனுவை நாங்கள் கண்டதில்லை
கற்பக விருட்சத்தை நாம் பார்த்ததில்லை
அமுத சுரபியை நாம் அடைந்ததில்லை
அட்சய பாத்திரத்தை நாம் ஏந்தவில்லை
அத்தனையும் நாம் உம் உருவில் கண்டோமம்மா !!!
நன்றிகள்……

அலையாக வந்து நீர் ஆறுதல் கூறினீர்
தலையாக நினைக்கின்றோம் – நன்றி,
மலையாக எம் துன்பம் விலையாகிடாமல்
வலை போட்டு காத்திட்டீர் – நன்றி,
சிலை போன்று நாமும் சித்துபிடித்திடா
செய்திகள் கூறினீர் – நன்றி,
கலைகள் என்றும் நீர் காற்றிலே போகிடா
காவலுக்கு இருந்திட்டீர் – நன்றி,
நன்றி, நன்றி, நன்றி…

அன்னாரின் 31 ஆம் நாள் சிரார்த்த தினம் 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா கந்தசாமி கோயிலில் நடைபெறும்.

தகவல்,
பிள்ளைகள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்
31 ஆம் நாள் சிரார்த்த தினம்
திகதி : 05-06-2014 வியாழக்கிழமை
இடம் : இல்லத்தில் (கனடா )
31 ஆம் நாள் சிரார்த்த தினம்
திகதி : 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை
இடம் : கனடா கந்தசாமி கோயில்
தொடர்புகளுக்கு
பாபு- (சர்வா), (மகன்) — கனடா
கைப்பேசி : +14169092773