அத்தியேட்டி கிரியையும் நன்றி நவிலலும்

அமரர் – திரு.செல்லத்துரை ஜெயராஜா (SK) (ஓய்வு பெற்ற களஞ்சியப் பொறுப்பாளர் நீர்ப்பாசனத்திணைக்களம்)

அமரர் – திரு.செல்லத்துரை ஜெயராஜா (SK) (ஓய்வு பெற்ற களஞ்சியப் பொறுப்பாளர் நீர்ப்பாசனத்திணைக்களம்)

சிலைபோற்கண் மூடிக் கொண்டாய்

விண்ணின்று மழைபொழியும் அந்தக் காலம்
வித்தகநீ ஏர்பிடித்த இளமைக் காலம்
கண்ணள்ளும் அழகோடு களிறு மீது
காரியென்னும் ஐயனார் உலாப்போம் காலம்
திண்மையோடு தோள்மீது கொம்பு தாங்கித்
திருவீதி தோறும் நீ சுமந்த காலம்
எண்ணுங்கால் இனிக்கிறது எங்கள் ஐய
எழுந்தோடி வந்துநின் கோலம் காட்டு!

பேரால மரக்கிளை கூடு கட்டிப்
பெருமையுற வாழும் புட்குலங்கள் போலச்
சீராள நின்னிழலில் நாமெல்லோரும்
செம்மைநலம் சிறந்திருக்கச் சிரித்து வாழ்ந்தோம்
நீராடும் நதிபோல அமைந்த வாழ்வில்
நிலைமாறித் தரைவீழ்ந்த மீன்போ லாக்கிக்
காரோடும் வானத்திற் கதிராய் நின்ற
கண்மணியே எமை விட்டு யாங்குற் றாயோ?

கூறாது குறியாது சென்றாய் அங்கே
கூடிவரும் முடிவெல்லாம் அவனே கண்டாய்
மாறாத நினைவெல்லாம் இங்கே விட்டு
மன்னவனே சிலைபோற்கண் மூடிக்கொண்டாய்
ஆறாத மனத்துயரைச் சேர்ந்தோர்க் காக்கி
ஐயனது திருவடிக்கீழ் என்றும் வாழும்
போறாநீ நாடிவிட்டாய்? பெம்மான் நிழற்
சுகம்கண்டு இனிதே வாழி!

கடந்த 2016.09.21 அன்று புதன்கிழமை இறைபாதமடைந்த எமது குடும்ப தலைவர் அமரர் – திரு.செல்லத்துரை ஜெயராஜா (SK) அவர்களின் அந்தியேட்டிக்கிரியை எதிர்வரும் 21.10.2016 வெள்ளிக்கிழமை இல – 50 உடையார் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிராத்தனைகளிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இல 50, உடையார் வீதி,
கல்முனை – 02
T.P- 0672220030
T.P- 0767220030
T.P- 0675689779

இவ்வண்ணம்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
அத்தியேட்டி கிரியை
திகதி : 21.09.2016 வெள்ளிக்கிழமை
இடம் : இல 50, உடையார் வீதி, கல்முனை - 02
தொடர்புகளுக்கு