மரண அறிவித்தல்

அமரர் திரு. ரத்தினம் கணேஷன்

தோற்றம்: 20.07.1947   -   மறைவு: 29.03.2017

 

அமரர் திரு. ரத்தினம் கணேஷன் (உரிமையாளர் – அம்பாள்ஸ் ஜீவலர்ஸ், இல 51, செட்டியார்த்தெரு, கொழும்பு – 11)
அவிசாவளையை பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு. கணேஷன் அவர்கள் கடந்த (29.03.2017) அன்று அதிகாலை 5.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ரத்தினம், அஞ்சலை அம்மாள் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ராமச்சந்திரன், ராயம்மாள் அவர்களின் மருமகனும், திருமதி புவனேஸ்வரி (ராசா) அவர்களின் அன்புக்கணவரும் ஆவார்.

இவர் திரு. காமலேஷன் (Sakthi International (PVT) Ltd), திரு. சர்வானந்தன் (G.P Shipping (PVT) Ltd), திரு. நிஷாந்தவேல் (Eclipse), ஆகியோரின் அன்புத்தந்தையும், திருமதி சத்தியவாணி, காமலேஷன், திருமதி உமாஜெயந்தி சர்வானந்தன், திருமதி. ஜனனி நிஷாந்தவேல் ஆகியோரின் மாமனாரும், திரு. தங்கவேல், திரு. பரமசிவம், திருமதி. காவேரி அம்மாள் சாத்தப்பன், லேட் திருமதி செல்லம்மாள் ராமையா, லேட் திருமதி. மருதம்மாள் முருகையா, லேட் திருமதி. அமிர்தம்மாள் பஞ்சரட்ணம் ஆகியோரின் சகோதரரும், லேட் திரு. R. முத்துராமலிங்கம் மற்றும் திரு.R. அசோக்குமார் (Robinson (PVT) Ltd) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவர் திரு.கருப்புசாமி தேவர் (கொழும்பு), லேட் திருமதி. லெட்சுமி அம்மாள், திருமதி மெய்யநாதன் ஜெயக்கொடி (ராகலை), திரு திருமதி அன்பழகன் ராஜேஸ்வரி (திகன) ஆகியோரின் சம்மந்தியும், திரு S.M.D மூர்த்தி (Sun Shine) அவர்களின் சகலையும் திருமதி தவமணி மூர்த்தி, திருமதி புதுமைப்பெண் பரமசிவம் அவர்களின் மைத்துனரும், லண்டனில் வசிக்கும் வரதராஜ், ரோகன்ராஜ், அசோக்ராஜ், வனிதா, ராஜேஷ் (Solideal (PVT) Ltd), வாணி ஸ்ரீ சுப்பிரமணியம் (பாலா), யோகசாந்தினி அமிர்தலிங்கம் (Uma Jewellers) ஆகியோரின் சித்தப்பாவும், P. சஞ்சைஸ் (Sea Lord Coontainer(PVT) Ltd), P. கிருஷாந்தன் (Desires) ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார். இவர் கிருஷ்ணகரன், அபேயஅஸ்தன், திருஷ்யதி, லதுக்சன், அஷ்வின், ஸ்ரீ கேசவ், அவிநாஷ், ரிகேஷா, கனிஷ்கா, லிஸ்வந்த் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அஞ்சலிக்காக தற்போது அன்னாரின் இல்லமான இல. 12, முத்துவெல்ல மாவத்தை, கொழும்பு 15 இல் வைக்கப்பட்டுள்ளன அன்னாரின் பூதவுடல், நாளை (01.04.2017) சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் சமய கிரோயைகள் நடைபெற்ற பின்னர், பொரளை கனத்தை, இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
திரு. கமலேஷன்
திரு. சர்வானந்தன்
திரு. நிஷாந்தவேல்

நிகழ்வுகள்
பொரளை கனத்தை, இந்து மயானம்
திகதி : 01.04.2017
இடம் : பொரளை
தொடர்புகளுக்கு
கமலேஷன்
கைப்பேசி : 0777371950