31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குல தெய்வமே!
முப்பத்தொரு நாட்கள் நகர்ந்தனவா?
முற்பகலும் தெரியவில்லை எங்களுக்கு
பிற்பகலும் தெரியவில்லை
எங்கள் அப்பா முகம் மட்டுமே தெரிகிறது எங்களுக்கு

பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
ஆறுதலுக்கு நன்மருந்தாய்
எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்து
எம்மை நல்வழிப்பாதையில் வழிநடத்திய
எங்கள் அன்புத் தெய்வமே!

எத்தனை நாட்கள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
எங்கள் இதயங்களின் வலியையும்
இழப்பின் வேதனைகளையும்
சொல்லமுடியாது வார்த்தைகளில்

உங்கள் பிரிவால் நாங்கள்
பலவீனப்பட்டுவிட்டோம் என்பது உண்மை
ஆயிரம் உறவுகள் எம் அருகில் இருந்தாலும்
எம் உள்ளக்கிடக்கையில் ஒளிரும்
எங்கள் அப்பாவின் திருமுகம்
எம்மைவிட்டு மறையுமா? மறக்குமா? மனதைவிட்டு அகலுமா?

என்றும் உங்கள் பிரிவால் தவிக்கும் உங்கள் செல்வங்கள்

எங்கள் அப்பாவின் துயரச் செய்திகேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாகவும், பலவழிகளிலும் எமக்கு ஆறுதல் சொல்லி உதவிகள் புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 05-10-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தியேட்டி, வீட்டுகிருத்தியம் நடைபெற்று அதன்பின்பு Canada Kandaswamy Kovil 1380 Birchmount Road(North of Lawrence) Scarborough, ON, M1P 2E3 Canada என்னும் முகவரியில் ந.ப 12:00 மணியளவில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொண்டு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குகன்(மகன்) — கனடா
கைப்பேசி : +15144029463
ரூபன்(மகன்) — கனடா
தொலைபேசி : +14164396665
கைப்பேசி : +16472969565
கௌரி(மகள்) — டென்மார்க்
தொலைபேசி : +4548425554
அசோக்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33143640622
நேசன்(மகன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33651473219
வரதன்(மகன்) — பிரான்ஸ்
கைப்பேசி : +33651743493
கிருஷ்ணபிள்ளை(மைத்துனர்) — இலங்கை
கைப்பேசி : +94771242761