1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திவாகரன் சுப்பிரமணியம்

திதி : 28 நவம்பர் 2012

நயினாதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திவாகரன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இல்லறத்தின் இன்ப ஒளியின் தீச்சுடராய் நீயிருந்தாய்
இன்பமான இனிமையான நல்வாழ்வுதனை பெற்றிருந்தோம்
தோற்றத்தில் உயரமில்லை – ஆனால்
உன் உள்ளத்தில் உயரம் கண்டோம்,
நீ வாழ்ந்த காலத்தில் காவியத்தின் தலை மகன் நீ!
காலனிடம் பறிகொடுத்து கதிகலங்கி ஒரு வருடமாயிற்று
எங்களது இதயத்தின் நினைவழியா சின்னமாய்!

உன் தன் வாய் மொழியின்
மகிழ்வான மொழி கேட்டு மகிழ்ந்தோமே!
இனி உன் தன் வாய் மொழி தான் கேட்பது எப்போது
இனமொழி பேதமின்றி அனைவரையும் ஒன்றாய் அனைத்திட்டாய்
நீ தந்த செல்வங்கள் அத்தனையும் முத்தான முத்துக்கள்
எம் வாழ்வின் வாழ்விற்கு பெயர் சொல்லும் முகவரிகள் மாறாது!

நீ தந்த அன்பு என்றும் நிலைத்து நிற்கும் நினைவுகளாய்
உன் பாதம் போற்றி பணிகின்றோம, வணங்குகின்றோம்
உந்தன் நல் வாழ்த்துக்காய்!

தகவல்,
மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
பாரி — பிரித்தானியா
கைப்பேசி : +447956313181