ஒராண்டு நினைவஞ்சலியும் திதியும்

அமரர் நடேசு விஜயரத்தினம்

உருண்டு விட்டது ஓராண்டு
உள்ளக் காயம் ஆறவில்ல உத்தமனாம்
உம் நினைவால் உறக்கம் பறந்தது…

வருகின்ற வழிதனில் உம்மை எதிர்பார்த்து எந்நாளும்
வழிகின்ற கண்ணீர் துடைத்துக் கலங்குகின்றோமே…

உருவத்தால் எமை விட்டுச் சென்றீர் உள்ளத்தால் அல்ல
ஊர் வேறு சென்றது போல் காத்திருக்கிறோம் இங்கே…

தலைமையற்ற குடும்பமாகத் தவிக்கின்றோம் ஐயா!
தந்து விடும் ஆறுதல் எம்நிலைதனை உணர்ந்து
கலையிழந்த மக்களாக காவல் இல்லா நிலைபோல
கலங்ககின்றோம் உம்பிரிவை நினைத்து நினைத்து
மலை போல உம்மை நம்பி மகிழ்திருந்தோம் நாம்
மாயமாய் சென்றுவிட்டீர்….

மனதில் வேரூன்றிவிட்டு
அலையென ஆண்டுகள் அடுக்கடுக்காய்ச் சென்றாலும்
ஆறாத பிரிவை ஆற்றிவிடச் சக்தி தா! ஆண்டவா!
அன்புக் கணவனாக ஆசை அப்பாவாக
அன்புச் சகோதரனாக எம்மோடு
அருகிருந்து இன்பச் சோலையாக வாழந்துவிட்டு
இன்று எம்மைவிட்டுச் சென்றாலும் உங்கள் அன்பு
ஒருபோதும் எம்மைவிட்டு நீங்காமல் தேடுகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
திதி 08.05.2013

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி பிள்ளைகள்
தொலைபேசி : 06152-858396